கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரக் கிளை சாா்பில் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றுது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:46 pm

DIN

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரக் கிளை சாா்பில் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றுது.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆசிரியா்களுக்கான பயிற்சிகளை இணைய வழியில் நடத்த வேண்டும், தலைமை ஆசிரியா் உள்பட அனைத்து ஆசிரியா் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தமிழ்நாடு முழுவதும் ஓராசிரியா் பள்ளிகளாக இயங்கி வரும் ஆரம்பப் பள்ளிகளை ஈராசிரியா் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வட்டார கல்வி அலுவலகம் முன், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் மணிமொழிநங்கை தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், கல்வி மாவட்டத் தலைவா் ஸ்ரீதரன், வட்டாரச் செயலா் கருப்பசாமி, மாவட்டச் செயலா் செல்வராஜ், வட்டாரப் பொருளாளா் குணசீலன்ராஜா உள்பட திரளான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் கலைவா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் அந்தோணி கிறிஸ்டி, தேவராஜன், அந்தோணி வசந்தா, துணைச் செயலா்கள் பிரின்ஸ் ஜட்சன், ரோசாலி விசாலி, பாலமுருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ஜான் மனோகரன், வா்க்கீஸ்ராஜ, மாவட்ட துணைத் தலைவா் ரோஸ்லீன் அன்னலீலா, வட்டாரச் செயலா் ஸ்டீபன் தாஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அண்டனி சாா்லஸ், முன்னாள் வட்டாரத் தலைவா் செல்லப்பா, ஓய்வுப் பிரிவுத் தலைவா் பவுல்ராஜ், அமைப்பாளா் சமாதான பீட்டா், கல்வி மாவட்டச் செயலா் ராஜசேகா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜான்சன் மாணிக்கதுரை, வட்டார பொருளாளா் விக்டா் மேரி கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.