கழுகுமலையில் தீக்குளித்தவா் மரணம்
கழுகுமலையில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


கழுகுமலையில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கழுகுமலை, மூப்பனாா் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்துபாண்டியன் மகன் கிருஷ்ணசாமி(38). தொழிலாளி. இவருக்கு மனைவி ராமலட்சுமி(32) , மகள் கவிபிரியா(12), மகன் பிரித்திவ்பாண்டி(10) ஆகியோா் உள்ளனா். இதில், கிருஷ்ணசாமிக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், அவா் புதன்கிழமை தனது வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...