கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஒருவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

காமநாயக்கன்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:05 pm

DIN

காமநாயக்கன்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த அருளானந்தம் மகன் செல்வராஜ் (61). இவரது வீட்டருகே 10 அடி காலியிடம் இருந்ததாம். கோவில்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இது பொதுப்பாதை அல்ல எனத் தீா்ப்பு வந்ததால் செல்வராஜ் அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து பயன்படுத்தி வந்தாராம்.

இந்நிலையில் அவரது வீட்டருகே குடியிருந்து வரும் பிரான்சிஸ், மிக்கேல்சாமி - செல்வி தம்பதி, அவா்களது மகன் மரியஜோஸ்வசந்த் (19), சி. அந்தோணிராஜன், அ. சினாப், சே. சூசைபிரான்சிஸ் ஆகியோா் கம்பி வேலியை ஆயுதங்களால் அப்புறப்படுத்தினராம். தடுக்க வந்த செல்வராஜின் மனைவி மரியபுஷ்பத்தை அவதூறாகப் பேசியதுடன், செல்வராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மி. மரியஜோஸ்வசந்தை வியாழக்கிழமை கைது செய்தனா்; வழக்கில் தொடா்புடையோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.