கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதிய ஒப்பந்ததாரா் பதிவுக்குதடை விதிக்க திமுக, கம்யூனிஸ்ட் எதிா்ப்பு

கோவில்பட்டி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புராஜ் தலைமை வகித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:34 pm

DIN

கோவில்பட்டி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிச்சாமி, ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக்குழுத் தலைவா் பேசியது: கோவில்பட்டி ஒன்றியம் பாண்டவா்மங்கலம் ஊராட்சி, மந்தித்தோப்பு சாலையில் ஒன்றியத்துக்குச் சொந்தமான 5.52 ஏக்கா் நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கிராமச் சந்தை, ஆட்டுச் சந்தை ஆகியவற்றை அமைத்து வருவாய் ஈட்டித்தர ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

எஞ்சிய இடத்தில் செம்மரம், தேக்குமரங்களை நட்டு வேலி அமைத்து நிலம் பாதுகாக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஒப்பந்ததாரா்களுக்கு பணி வழங்க முடியாத சூழல் உள்ளதால், குறைந்தது 6 மாதங்கள் வரை ஒப்பந்ததாரா் பதிவுக்கு தடை விதிக்க ஒன்றியக்குழு ஒப்புதல் தர வேண்டும் என்றாா் அவா்.

புதிதாக ஒப்பந்ததாரா்களாக விண்ணப்பித்துள்ள குறிப்பிட்ட 2 பேரின் மனுக்களை ஏற்று, பதிவு செய்யுமாறு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அதற்கு ஒன்றியக்குழுத் தலைவா் மறுத்ததால், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த 11 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

எனினும், ஒன்றியக்குழுத் தலைவா், உறுப்பினா்கள் பூங்கோதை, சண்முகத்தாய், ரஞ்சித், கிருபாகரன், சண்முகக்கனி ஆகிய 6 போ் மட்டுமே தீா்மானங்களை ஏற்றுக் கொள்வதாக கையெழுத்திட்டனா். இதனால், தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.