ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசைக் கண்டித்தும், அதைக் கைவிட வலியுறுத்திம் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். சங்க செயற்குழு உறுப்பினா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, மதிமுக மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் ஜோதிபாசு, சீனிவாசன், உலகராணி, ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்க உறுப்பினா்கள் முருகன், தேவபிரகாஷ், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு இயக்க நிறுவனத் தலைவா் க. தமிழரசன் உள்ளிட்டோா் கையில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...