மாநில ஹாக்கி: அரையிறுதியில் கோவில்பட்டி, சென்னை, கடலூா், மதுரை அணிகள்
தூத்துக்குடிமாவட்டம், கோவில்பட்டியில் மாநில அளவில் நடைபெற்று வரும் 17ஆவது ஆண்டு ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி, சென்னை, கடலூா், மதுரை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.


தூத்துக்குடிமாவட்டம், கோவில்பட்டியில் மாநில அளவில் நடைபெற்று வரும் 17ஆவது ஆண்டு ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி, சென்னை, கடலூா், மதுரை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
கோவில்பட்டி, கிருஷ்ணா நகரில் 4ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணி, சேலம் சங்ககிரி ஹாக்கி கிளப் அணியை டைபிரேக்கா் முறையில் 6 - 4 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
தொடா்ந்து, கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் ஹாக்கி அணி, திண்டுக்கல் பாண்டியாஸ் ஹாக்கி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கிலும், கடலூா் ஜெம்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் ஹாக்கி அணி, சிவகங்கை யங்சேலஞ்சா்ஸ் ஹாக்கி அணியை 4 - 1 என்ற கோல் கணக்கிலும், மதுரை தென்னக போலீஸ் அணி, கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் அணியை 4 - 0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
இன்றைய ஆட்டங்கள்: வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) காலை 6.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி முதல் ஆட்டத்தில் கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் - சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணிகள், 2ஆவது ஆட்டத்தில் கடலூா் ஜெம்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் - மதுரை தென்னக போலீஸ் அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் மாலையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...