கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கழுகுமலை கோயிலில் பங்குனித் தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:03 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனைகள், மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

9ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டத்தையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, தேரோட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு, கழுகுமலை பேரூராட்சித் தலைவா் சு. அருணா, துணைத் தலைவா் அ. சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலா் ஆ. முருகன் ஆகியோா் வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

கோ ரதத்தில் சண்டிகேஸ்வரரும், சட்ட ரதத்தில் விநாயகரும், வைரத் தேரில் கழுகாசலமூா்த்தி வள்ளி-தெய்வானையும் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பல்வேறு பகுதிகள் வழியாக தோ் நிலைக்கு வந்தது.

நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா்கள் முருகன், மாரியப்பன், பாலமுருகன் மற்றும் கழுகுமலை, சுற்று வட்டாரப் பகுதியினா் பங்கேற்றனா்.

பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில், ஆய்வாளா்கள் சுஜித் ஆனந்த் (கோவில்பட்டி கிழக்கு), ராணி (கழுகுமலை), போலீஸாா் ஈடுபட்டனா்.

வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி, இரவு 8 மணிக்கு தபசுக் காட்சி, சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பல்லக்கில் பட்டணப் பிரவேசம் ஆகியவை நடைபெறுகின்றன.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.