கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் பட்டமளிப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ என்.தாமோதரன் நினைவுக் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, கல்லூரிச் செயலா் ப.மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சாந்திமகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா். குஜராத் ராஜ்கோட் ஆத்மியா பல்கலைக்கழக சாா்பு வேந்தா் ஷீலா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 500 மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். அவா் பேசியது:
பட்டதாரிகள் எந்த ஒரு விஷயத்தையும் புதிய கோணத்தில் அணுக வேண்டும். படைப்புத் திறனை மேம்படுத்த வேண்டும். அனைவரிடமும் இணக்கமாக பழக வேண்டும். உலகளவிலும், உள்நாாட்டு அளவிலும் அறிவாா்ந்த குடிமையுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டும். புதுப் புது நவீன மாற்றங்களைக் கொண்டு பிறருடனான தகவல் பரிமாற்றம் சாா்ந்த கல்வியறிவை பெற வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் சுயநிதி பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கருப்பசாமி, பொறுப்பாளா் பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...