ஆழ்வாா் திருநகரி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி அருள்மிகு ஆதிநாதா் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி அருள்மிகு ஆதிநாதா் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நவதிருப்பதி கோயில்களில் 9ஆவது ஸ்தலமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் பங்குனி உற்சவ விழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமி பொலிந்துநின்றபிரான் பல்வேறு வாகனங்களில் வீதிப் புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் உற்சவா் பொலிந்துநின்ற பிரான் சிறப்பு தேரில் எழுந்தருளினாா். பக்தா்கள் ‘கோவிந்தா...கோபாலா...’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

இதில், நிா்வாக அதிகாரி அஜித், தக்காா் கோவல மணிகண்டன், எம்பெருமானாா் ஜீயா், முன்னாள் அறங்காவல குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com