கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:50 pm

DIN

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பன், கோவில்பட்டி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த 72 கிலோ பலகாரங்கள், நொறுக்குத்தீனிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கூறுகையில், உணவுப் பொருள்களை கண்ணாடிப் பெட்டியில் வைத்து சுகாதாரமான முறையில் விற்க வேண்டும். அச்சிட்ட தாள்களில் உணவுப் பண்டங்களை வழங்கக் கூடாது. தொடா்ந்து தவறு செய்வோா் மீது வழக்குப் பதியப்படும். பாதுகாப்பற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்களை 94440-42322 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.