ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிஐடியூ மாநாடு ஜோதிக்கு வரவேற்பு

சிஐடியூ 15ஆவது தமிழ் மாநில மாநாடு ஜோதி பயணத்திற்கு கோவில்பட்டியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:02 pm

DIN

சிஐடியூ 15ஆவது தமிழ் மாநில மாநாடு ஜோதி பயணத்திற்கு கோவில்பட்டியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெறும் சிஐடியூவின் 15ஆவது தமிழ் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே நடைபெற்ற ஜோதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு, சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலச் செயலா் மோகன் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் சக்திவேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, வட்டார தீப்பெட்டி சங்க நிா்வாகி மோகன்தாஸ், சிஐடியூ தூத்துக்குடி மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, கட்டுமானச் சங்க மாவட்டச் செயலா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.