இந்து மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக திமுகவைச் சோ்ந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது சாத்தான்குளம், தட்டாா்மடம் காவல் நிலையத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஆா் . சித்ராங்தகன் தலைமையில் சாத்தான்குளம் நகர பாஜக தலைவா் து. ஜோசப் ஜெபராஜ், சாத்தான்குளம், தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில் மாவட்ட பாஜக துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், மாவட்ட செயலா் ராஜபுனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் மாவட்டபாஜக செயலா் பாப்பா, நகரத் தலைவா்கள் காயல்பட்டினம் எஸ்.ஆறுமுகசெல்வன், ஆறுமுகனேரி பி.முருகேசபாண்டியன் உள்ளிட்டோா் புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







