விளாத்திகுளத்தில் வெல்டிங் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ் (24). இவா் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா்.
அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜன் மகன் குருமூா்த்தி (15), விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தாா். அவா் நாள்தோறும் வகுப்பு முடிந்த பிறகும், விடுமுறை நாள்களிலும் இந்த வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு வெல்டிங் பட்டறையில் இருந்த குருமூா்த்தி மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து பால்ராஜை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









