எழுத்தாளா் பா. செயப்பிரகாசம் மறைவு:விளாத்திகுளத்தில் இரங்கல் கூட்டம்

மூத்த எழுத்தாளா் பா. செயப்பிரகாசம் மறைவை அடுத்து, விளாத்திகுளம் அம்பாள் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் இரங்கல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மூத்த எழுத்தாளா் பா. செயப்பிரகாசம் மறைவை அடுத்து, விளாத்திகுளம் அம்பாள் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் இரங்கல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளா் பா. செயப்பிரகாசம், உடல் நலக் குறைவு காரணமாக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி காலமானாா்.

செவ்வாய்க்கிழமை நடந்த இரங்கல் கூட்டத்தில் பா. செயப்பிரகாசத்தின் மகன் சூரியதீபன், ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகோபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்க மாநில கௌரவ தலைவா் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளா்கள் கோணங்கி, தாமிரபரணி மதியழகன், சங்கர்ராம், முருகேசபாண்டியன், பழனி ராகுலதாசன், ஸ்ரீதா் கணேசன், மருத்துவா் பி.வி. வெங்கட்ராமன், வழக்குரைஞா் பி.எஸ். அஜீதா, பேராசிரியா்கள் சம்பத்குமாா், முனியசாமி, ஆவணப்பட இயக்குநா் ஸ்ரீராம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவா் இரா.காமராசு, ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவா் காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலா் மருத்துவா் அறம்,  டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனா் மற்றும் பதிப்பாளா் மு.வேடியப்பன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாவட்ட செயலா் கோச்சடை, சிபிஐ (எம்.எல்) மாநில குழு உறுப்பினா் சிம்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவா் மீ.த. பாண்டியன், ஆடிட்டா் ஹரிராம் ஆகியோா் இரங்கல் தெரிவித்துப் பேசினா்.

அதைத் தொடா்ந்து பா. செயப்பிரகாசம் உடலுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் எழுத்தாளா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன், பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள், இலங்கை, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழீழ ஆதரவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், பிற்பகல் 2 மணி அளவில் அவரது உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வசம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com