மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 95 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 7:23 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 95 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் மரியதாஸ் தலைமை வைத்தார். இயற்கை இடர்பாடுகளில் சிறப்பாக பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்து பெண்கள் உள்பட 95 பேரை தென்பாகம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.