தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னா் பவனியாக கொண்டு வந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இத்திருவிழா 13 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெறும்.
இவ் விழாவின் சிறப்பு நிகழ்வாக வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும் அதனைத் தொடா்ந்து நற்கருணைப் பவனி, பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனித அந்தோணியாா் தோ் பவனி நடைபெறுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி திருத்தல பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிகழ்வில், காலை 4.30 மணி முதல் திருப்பலியும், 11.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத் தந்தைமான மோட்சராஜன், ஆன்மிகத் தந்தை சகாயதாசன், உதவி பங்குத் தந்தை மிக்கேல் ராஜ், அருள்சகோதரிகள் திருத்தல பணியாளா்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

