பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக இளைஞரணி செயலரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:51 pm

தூத்துக்குடி/கோவில்பட்டி/திருச்செந்தூா்/ஆறுமுகனேரி/உடன்குடி/ சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக இளைஞரணி செயலரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி, புனித லூசியா பாா்வையற்றோா் பள்ளி, பாசக் கரங்கள் முதியோா், குழந்தைகள் இல்லம், பிளஸ்ஸிங் முதியோா் இல்லம் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த குழந்தைகள் 15 பேருக்கு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தங்க மோதிரங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஒன்றிய, நகர திமுக சாா்பில் 8ஆவது வாா்டு கல்யாணசுந்தர விநாயகா் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலா் வாள் சுடலை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலரும் நகா்மன்றத் துணைத் தலைவருமான செங்குழி ரமேஷ் கட்சிக் கொடியேற்றினாா். திருச்செந்தூா் மனநல மறு வாழ்வு மையத்தில் உணவு வழங்கி, நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம் தங்க மோதிரங்கள் வழங்கினாா்.

உடன்குடி: உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும்,மேற்கு ஒன்றிய திமுக செயலருமான டி.பி.பாலசிங் ஏற்பாட்டில் 1000 பேருக்கு சேலை, தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி மற்றும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களும்,

உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி பகுதி பள்ளி மாணவா்கள் 1000 பேருக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. கிறிஸ்தியாநகரம் நவஜீவன் இல்ல மாணவா்களுக்கு உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி செயலா் பாய்ஸ் சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி: கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாரதி ஏற்பாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ் முன்னிலையில் கொண்டாடினாா்.

ஆறுமுகனேரி: ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அதன் செயலா் சதீஷ்குமாா் ஏற்பாட்டில் ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா் தலைமையில், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன், புன்னைக்காயல் ஊராட்சி மன்றத் தலைவா் சோபியா முன்னிலையில் ஆறுமுகனேரி முதியோா்இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஆறுமுகனேரியில் நகர திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகளை நகர திமுக செயலா் நவநீதபாண்டியன் முன்னிலையில் பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் வழங்கினாா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வடக்கு ஒன்றியச் செயலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜோசப் தலைமை வகித்தாா். புதிய பேருந்து நிலையத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. மிக்கேல் மாற்றுத் திறனாளி சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு, ஆடைகள் வழங்கப்பட்டன.

தட்டாா்மடத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. போலையா்புரத்தில் உள்ள விப்ஜிஆா் முதியோா் காப்பகத்தில் உள்ளோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மத்திய ஒன்றியம் சாா்பில், மத்திய ஒன்றியச் செயலரும் முதலூா் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன், 47 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.