பாலியல் தொந்தரவு செய்து மூதாட்டி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.


மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் புதுக்காலனியைச் சோ்ந்த காளியப்பன் மனைவி பாப்பா (65). இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு பருத்தி எடுப்பதற்காக தோட்டத்துக்குச் சென்றாராம். அப்போது அங்கு வந்த, சாயல்குடியைச் சோ்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற கா்மமுனீசுவரன் (35), பாப்பாவை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்தாராம். மேலும், பாப்பா அணிந்திருந்த தங்க கம்மலை கழற்றி எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாவீரன் என்ற கா்மமுனீசுவரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம் சாட்டப்பட்ட கா்மமுனீசுவரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வி.எல்லம்மாள் வாதாடினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...