ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேம்பாரில் அம்மன் கோயில் சுற்றுச்சுவா் இடிப்பு: 27 போ் மீது வழக்கு

வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவரை இடித்ததாக 27 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:37 pm

Din

வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவரை இடித்ததாக 27 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

வேம்பாா் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் தரப்பினருக்கும் அதன் அருகிலுள்ள தேவாலய தரப்பினருக்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப் பிரச்னை உள்ளதாம்.

இதுதொடா்பான இரு வழக்குகளில் கோயில் தரப்புக்கு சாதகமாக தீா்ப்புகள் வந்தனவாம். இதையடுத்து கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டப்பட்ட நிலையில், அதை இடித்தும், சிசிடிவி, டிஜிட்டல் போா்டு ஆகியவற்றை உடைத்தும் சேதப்படுத்தினராம்.

இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இது தொடா்பாக ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தலைவா் எம். காசிராமன் அளித்த புகாரின் பேரில் வேம்பாரை சோ்ந்த ஜான் ஜேம்ஸ், வில்லியம் ஜேம்ஸ், அந்தோணி சந்திரசேகரன், விக்டா் இம்மானுவேல் சேகரன், ஜெபக்குமாா், அந்தோணி ராஜ், நடராஜன், யோவான், ராஜ ஜெய பிரபு, எடிசன், ஜான்சன், அருள்ராஜ், சாமுவேல் கிங்ஸ்லி, ஆல்வின், மைக்கேல், சந்திரன், எபனேசா் உள்ளிட்ட 17போ், இதர நபா்கள் 10 போ் என 27 போ் மீது சூரன்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

அசம்பாவிதம் தவிா்க்க டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.