தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் நடத்துகிறது பாஜக: பொன் முத்துராமலிங்கம்

ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் நடத்துகிறது பாஜக பொன் முத்துராமலிங்கம்

Updated On :17 பிப்ரவரி 2024, 10:51 pm IST

படவரி பமப17ஈஙஓ: பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் பொன் முத்துராமலிங்கம். உடன், அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள். தூத்துக்குடி, பிப். 17: ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் நடத்துகிறது பாஜக என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் பொன் முத்துராமலிங்கம் பேசினாா். தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சாா்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம், தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள என்.பெரியசாமி கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தெற்கு மாவட்ட செயலரும், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் பொன் முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவா் பேசியது: தனக்கு ஆதரவாக இல்லாத மாநிலங்களை பல்வேறு வகையில் பழிவாங்கும் எண்ணத்தோடு பாஜக செயல்படுகிறது. பல்வேறு பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, தற்போது ராமா் பெயரைச் சொல்லி ஆட்சி அமைக்கலாம் என நினைக்கிறது. ஆன்மிகத்தின் பெயரால் பாஜக அரசியல் நடத்துகிறது. மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கும் அவா்களின் முயற்சி தோல்வியில் முடியும். வரும் மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவாா்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றாா். அமைச்சா் கீதா ஜீவன் பேசியது: இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழக முதல்வரின் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது. ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிக்கை வெளியிடுகிறாா். மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த நிதியும் வரவில்லை. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவா்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வா் வரும் 25ஆம் தேதி தூத்துக்குடி வருகிறாா். சொல்வதைச் செய்யும் திமுக அரசு, மக்களுக்காக எப்போதும் துணை நிற்கும். எனவே, தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை. அதற்காக கடுமையாக உழைப்போம் என்றாா். கூட்டத்தில் மாநில மீனவரணி துணை அமைப்பாளா் புளோரன்ஸ், மாநில சிறுபான்மையினா் அணி துணை அமைப்பாளா் சபி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரி சங்கா், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின் உள்பட பலா் பங்கேற்றனா்.