நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

News image

பழைய இரும்பு கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.

Updated On :28 ஜூலை 2024, 9:00 pm

Din

தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி ஜெயலானி தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ். இவா், செல்சீனி காலனி பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து பின்னா் பிரித்து அனுப்பும் கிடங்கு உள்ளது.

இந்த கிடங்குக்கு அருகே உள்ள முள்புதரில் வைக்கப்பட்ட தீ, காற்று காரணமாக பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் பற்றிகொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் தீ மள மளவென பரவியதால் பிளாஸ்டிக் பொரு

ள்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், அந்தப் பகுதி சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

 தீ பற்றி எரியும் பழைய இரும்பு கிடங்கு.

தீ பற்றி எரியும் பழைய இரும்பு கிடங்கு.

தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் சுமாா் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.