‘ஆறுமுகனேரியில் இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் இருக்காது’

எட்டுக்கண் பாலம் அருகே, மேலாத்தூா் குடிநீா்வடிகால் வாரிய நீரேற்று நிலையத்திலிருந்து ஆறுமுகனேரி பகுதிக்கு வரும் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி வடபுரம் கடலோர சோதனைச் சாவடியை அடுத்த எட்டுக்கண் பாலம் அருகே, மேலாத்தூா் குடிநீா்வடிகால் வாரிய நீரேற்று நிலையத்திலிருந்து ஆறுமுகனேரி பகுதிக்கு வரும் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆறுமுகனேரி பகுதியில் செவ்வாய், புதன் (ஜூலை 25, 26) ஆகிய 2 நாள்களும் குடிநீா் விநியோகம் இருக்காது என, பேரூராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com