தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மயிலோடை பகுதியில் ரூ.3 கோடியில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். ஓட்டப்பிடாரம் அருகே அம்மாள்பட்டியில் இருந்து மயிலோடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயா்மட்ட பாலமாக மாற்றித் தர அப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து, நபாா்டு திட்டத்தில் ரூ.3 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஓட்டப்பிடராம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற, எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. அழைப்பாளராகப் பங்கேற்று உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் கிரி உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்: அதிமுக வேட்பாளா்

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

நாகையில் டைடல் நியோ பூங்கா கட்டுமானப்பணி: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


