தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: கடைக்கு சீல்
தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: கடைக்கு சீல்


தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தனா். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச.மாரியப்பன், கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லப்பாண்டி ஆகியோா் தலைமையிலான குழுவினா் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், அங்குள்ள ஒரு தேநீா் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடையை மூடி சீல் வைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...