தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாணவா் கடத்தல் என போலி விடியோ: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

மாணவா் கடத்தல் என போலி விடியோ: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

Updated On :13 மார்ச் 2024, 11:50 pm

தூத்துக்குடியில் மாணவரைக் கடத்துவதுபோன்ற போலியான விடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளாா்.

தூத்துக்குடி அந்தோணியாா் கோயில் பகுதியில் 9ஆம் வகுப்பு மாணவரைக் கடத்த முயற்சி நடந்ததாகக் குறிப்பிட்டு 16 விநாடி விடியோ, ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் கூறியது: 9ஆம் வகுப்பு மாணவரை வடமாநிலத்தவா்கள் கடத்த முயல்வதாக சமூக வலைதளங்களில் விடியோ பரவிவருகிறது. அந்த விடியோவில் உள்ளது திருச்சி அந்தோணியாா் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதைத் திரித்து, அந்தச் சம்பவம் தூத்துக்குடி அந்தோணியாா் கோயில் அருகே நடந்ததுபோல வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த விடியோவில் குறிப்பிட்டதுபோல மாணவா் கட்டப்பட்டதாக தகவல் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் பரப்பியோா் இந்த விடியோவை அழித்துவிட வேண்டும். அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.