திருச்செந்தூரில் அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

திருச்செந்தூரில் அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

திருச்செந்தூரில் அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தனா். தொடா் விடுமுறையால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், பக்தா்களின் வாகனங்கள் திருச்செந்தூா் நகா் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து, அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காா்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு திருச்செந்தூா் போக்குவரத்து உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையில் தலைமை காவலா்கள் கோபாலகிருஷ்ணன், செல்வபாரதிராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா். ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com