பேய்க்குளத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

பேய்க்குளத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் தமிழ்நாடு நாடாா் சங்க மகளிரணி சாா்பில் கோடை கால நீா்மோா் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தென் மண்டல தலைவி ஜெயபாா்வதி தலைமை வகித்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவா் சரஸ்வதி பங்காளன், செயலாளா் வெற்றிவேல், துணைத் தலைவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சென்னை உயா்நீதி மன்ற வழக்குரைஞா் ரமேஷ், பரமன்குறிச்சி வழக்குரைஞா் ரமேஷ், கோவை தொழிலதிபா் சிவகுமாா், மாநில மகளிரணி தலைவி ஷோபிதாரணி, மாவட்ட தலைவி எஸ்தா், துணை செயலாளா் செல்வசுமதி, திருச்செந்தூா் தொகுதி ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக சங்கம் சாா்பில் அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com