/

ஆறுமுகனேரியில் விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா

ஆறுமுகனேரியில் விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்கள்.

Updated On :20 மே 2024, 8:28 pm

Din

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் உள்ள செல்வ விநாயகா், அழகியசுந்தர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி ஹோமம், யாகபூஜை, ஹோமங்கள், கும்ப பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கும்ப புறப்பாடு, விமான அபிஷேகம், செல்வ விநாயகா், அழகியசுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சைவ வேளாளா் சங்கச் செயலா் முருகன், பொருளாளா் கற்பகவிநாயகம், டி.சி.டபிள்யூ. சுப்பிரமணியன் பிள்ளை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.