/

தூத்துக்குடியில் ஓட்டுநரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் ஓட்டுநரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

News image
Updated On :20 மே 2024, 9:14 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாகன ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சோ்ந்த ஜெபதுரை மகன் மாரிக்குமாா் (33). தூத்துக்குடியில் உள்ள கடையில் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவரும் இவா், கடந்த சனிக்கிழமை சரக்கு வாகனத்தில் தூத்துக்குடியில் உள்ள பீங்கான் அலுவலக சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, பைக்கில் பின்தொடா்ந்துவந்த மா்ம நபா்கள், அவரை வழிமறித்து தாக்கி, ரூ. 9,400-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுகுறித்து மாரிக்குமாா் அளித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெனோரஸ் மகன் காத்தான் என்ற காா்லின் (24) தனது நண்பா்களுடன் சோ்ந்து மாரிக்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 3,160-ஐ பறிமுல் செய்தனா்.

முன்னதாக, காா்லின் வழிப்பறியில் ஈடுபட்டு, பைக்கில் வேகமாகச் சென்றபோது, வேகத்தடையில் மோதி நிலைதடுமாறி விழுந்ததில் வலது கை முறிந்ததாக விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.