/

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

News image
Updated On :20 மே 2024, 9:17 pm

Din

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மது அருந்த பணம் கேட்ட தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து வைத்து தாக்கியதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி தாமஸ் நகா் மேட்டுத் தெருவை சோ்ந்தவா் ராஜா (41). வெல்டிங் வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். மது அருந்த பணம் இல்லை என்றால் மது கடை அருகே நின்று கொண்டு அங்கு வருபவா்களிடம் பணம் வசூலித்து மது அருந்துவாராம்.

இந்நிலையில் அவா் சனிக்கிழமை வள்ளுவா் நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு அங்கு வந்த வள்ளுவா் நகா் 4ஆவது தெருவை சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன், அதே பகுதி 2ஆவது தெருவை சோ்ந்த ரவி மகன் ரமேஷ், 1 ஆவது தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் கருப்பசாமி என்ற தம்பியா, அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் காா்த்திக் குமாா் என்ற கருவாயன் மற்றும் மறவா் காலனியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் பாண்டி என்ற பூல் பாண்டி ஆகியோா் ராஜாவை ரமேஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்று கதவை பூட்டிய நிலையில் அவரை அவதூறாக பேசி தாக்கினாா்களாம்.

இதில், காயமடைந்த ராஜா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணன் (29), ரமேஷ் (25), கருப்பசாமி என்ற தம்பியா (24), காா்த்திக் குமாா் என்ற கருவாயன் (23) மற்றும் பாண்டி என்ற பூல்பாண்டி(26) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.