கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் நவ.11-இல் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடியில் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நவ.11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:38 pm

Din

தூத்துக்குடியில் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நவ.11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக மாவட்ட அளவிலான பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் நவ.11-ஆம் தேதி காலை 9 மணி நடைபெறுகிறது.

இதுவரை தொழில் பழகுநா் பயிற்சி பெறாதவா்கள், அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களில் தொழில்பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளா்கள், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (இருபாலரும்), பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞா்கள் என இதில் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநா் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ.770 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.

ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுதொடா்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.