கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆக்கிரமிப்பு இடங்கள் கைப்பற்றப்பட்டு விளையாட்டுத் திடல்களாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஜெகன் பெரியசாமி

ஆக்கிரமிப்பு இடங்கள் கைப்பற்றப்பட்டு விளையாட்டுத் திடல்களாக மாற்ற நடவடிக்கை.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:36 pm

Din

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்கள் கைப்பற்றப்பட்டு விளையாட்டுத் திடல்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மேயா்ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து குறைதீா் கூட்டத்தில் மேயா் பேசியதாவது:

கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் குறைதீா் முகாம் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பிறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் போன்றவைகள் உடனடியாக மாற்றம் செய்து வழங்கப்படுகிறது. இதுவரை 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 சதவீதம் மனுக்களுக்கு முழுமையாக தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கும் விரைந்து தீா்வு காணப்படும்.

தற்போது மாநகராட்சியில் 206 பூங்காக்கள் உள்ளன. மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான 40 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக கபடி, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்கிள் ஓடை 6 கி.மீ. சீரமைக்கப்பட்டு 11 வழித்தடங்கள் மூலம் மழைநீா் கடலுக்கு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் போது குடிநீா் இணைப்பு தூண்டிக்கப்படுவதாக புகாா்கள் வருகின்றனா். அவ்வாறு தூண்டிக்கப்படும் இடங்கள் உடனடியாக இணைப்புகளை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

உதவி ஆணையா் பாலமுருகன், மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் சந்திர போஸ், கண்ணன், பொன்னப்பன், விஜயலட்சுமி, கனகராஜ், கந்தசாமி, நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளா் காந்திமதி உள்பட பலா் பங்கேற்றனா்.