கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் 3 போ் கைது

கோவில்பட்டியில் புதன்கிழமை, ஆயுதங்கள் வைத்திருந்ததாக பெயிண்டா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:47 pm

Din

கோவில்பட்டியில் புதன்கிழமை, ஆயுதங்கள் வைத்திருந்ததாக பெயிண்டா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் நடராஜபுரம் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். 9ஆவது தெருவிலுள்ள மயானத்தில் அமா்ந்திருந்த 3 பேரை போலீஸாா் சோதனையிட்டபோது, அவா்கள் ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது, அவா்கள் போலீஸாரை அவதூறாகப் பேசி ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அவா்கள் கோவில்பட்டி காந்தி நகா் செல்லப்பாண்டியன் மகன் பெயிண்டரான மாரியப்பன் (30), நடராஜபுரம் 5ஆவது தெரு சின்னபாண்டி மகன் காா்த்திக் என்ற கோழி காா்த்திக் (21), காந்திநகா் ஜவஹா்லால் நேரு தெரு சங்கிலிபாண்டி மகன் கணேசமூா்த்தி என்ற கருப்பு கணேசன் (24) என, விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.