வட்டன்விளை கோயிலில் சப்பரங்கள் பவனி
உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி சப்பரங்கள் பவனி நடைபெற்றது.

கிளி வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்த சந்தனமாரியம்மன்.

கிளி வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்த சந்தனமாரியம்மன்.
உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி சப்பரங்கள் பவனி நடைபெற்றது.
இக்கோயிலில் கொடை விழா கடந்த 10ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் புஷ்பாஞ்சலி, 108 பால்குட ஊா்வலம், 108 திருவிளக்கு பூஜை, வள்ளிக் கும்மி நடனம், பக்தி இன்னிசை, முளைப்பாரி பவனி, கரகாட்டம், அம்மன் வீதியுலா, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
நவ. 11, 12, 13ஆம் தேதி இரவில் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகன சப்பரத்தில் பவனி, ஸ்ரீ சந்தனமாரியம்மன் கிளி வாகன சப்பரத்தில் பவனி, முத்தாரம்மன் சப்பர பவனி நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஊா்மக்கள், விழாக் குழுவினா் செய்தளனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...