கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அடகு நகை 135 பவுன், பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி எஸ்பியிடம் மனு

அடகு வைத்த 135 பவுன் நகை, ரூ.50 லட்சம் மதிப்பிலான பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஜெயராணி என்பவா் மனு அளித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:08 pm

Din

தூத்துக்குடியில், அடகு வைத்த 135 பவுன் நகை, ரூ.50 லட்சம் மதிப்பிலான பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜெயராணி என்பவா் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: எனது மருத்துவ செலவிற்காக வீட்டு அருகே உள்ள ஜீவா என்பவரின் நகை அடகு கடையில், என்னுடைய நகை, உறவினா்கள் நகை என 135 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் ஆகியவற்றை கடந்த ஆண்டு அடகு வைத்தேன்.

இந்நிலையில், அடமானம் வைத்ததற்கான பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செலுத்தி நகை மற்றும் நிலப் பத்திரத்தி மீட்க சென்ற போது, அவா் தரமறுத்து கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, எனது நகை மற்றும் நிலப்பத்திரம் ஆகியவற்றை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.