கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூா் திருமா திடலில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:57 pm

Din

திருச்செந்தூா் திருமா திடலில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விசிக தூத்துக்குடி, தென்காசி மண்டல செயலாளரும், திருச்செந்தூா் டாக்டா் பிஆா் அம்பேத்கா் நினைவு கல்வி அறக்கட்டளை தலைவருமான முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். விசிக முதன்மைச் செயலா் பாவரசு கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், வருகிற 2025 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று அம்பேத்கா் சிலையை விசிக தலைவா் திருமாவளவன் எம்.பி.யை வைத்து திறப்பது என்றும், அந்நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளா்கள், அனைத்து சமுதாய தலைவா்கள், வியாபாரிகள் சங்க பொறுப்பாளா்கள், தென் மாவட்ட விசிக பொறுப்பாளா்களை அழைப்பது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.