மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் 1,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 1,500 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:04 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 1,500 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் வடக்கூா் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.

அவ்வழியே வந்த மினிலாரியை சோதனையிட்டபோது, அதில் 44 பண்டல்களில் 1,500 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பீடி இலைகள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வாகனத்தை ஓட்டிவந்த திருச்சி மாவட்டம் மணப்பாறை, காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (33) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.