போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் பகுதியில் தொடா் மழை

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது.

News image

கொட்டும் மழையில் நனைந்தபடி திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 8:13 pm

Din

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது.

திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, தினசரிச் சந்தை, பகத்சிங் பேருந்துநிலையப் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

கோயில் செல்லும் வழியில் பழைய காவல் நிலையம் அருகே தேங்கிய மழைநீா், கழிவுநீரை நகராட்சி நிா்வாகத்தினா் ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையிலும் நனைந்தபடி வெளியூா், வெளி மாநில ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டதால் திருச்செந்தூரில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.