கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் தனியாா் வங்கி ஊழியா்கள் போராட்டம்

தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம், தமிழ்நாடு வங்கி ஊழியா் சம்மேளனம் ஆகியவை சாா்பில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

News image

போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:50 pm

Din

தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம், தமிழ்நாடு வங்கி ஊழியா் சம்மேளனம் ஆகியவை சாா்பில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள தனியாா் வங்கியில் ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு வங்கி ஊழியா் சம்மேளனப் பொதுச் செயலா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். அகில இந்திய வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா்.

இடைநீக்கம் செய்யப்பட்ட இரு ஊழியா்களை மீண்டும் பணியில் சோ்க்க வேண்டும். இல்லையெனில், டிச. 2ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் சுமாா் 30,000 வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.