பட்டயக் கணக்கா் போட்டித் தோ்வு: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு இலவச பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பட்டயக் கணக்கா், நிறுவன செயலா், செலவு, மேலாண்மைக் கணக்கா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ சாா்பில் சென்னையிலுள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா்-பழங்குடியின மாணவா்களுக்கு பட்டயக் கணக்கா்-இடைநிலை, நிறுவன செயலா்-இடைநிலை, செலவு, மேலாண்மைக் கணக்கா்-இடைநிலை ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
ஆதிதிராவிடா்-பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த, இளநிலை வணிகவியல் பட்டம் பெற்ற மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்யலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஓராண்டுப் பயிற்சிக்கு தோ்வாகும் மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.