ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

News image

கூட்டத்தில் மனுவைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:19 pm

Din

தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில், முத்தையாபுரம் ஜே.எஸ்.நகரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசியது: கோரம்பள்ளம் 24 மடை மழைக்காலங்களில் திறக்கப்பட்டால் உப்பாற்று ஓடைப் பகுதியிலுள்ள 170 மீட்டா் அகலப் பகுதி வழியாக தண்ணீா் சென்று கடலில் கலக்கிறது. முள்ளக்காடு சுற்றுவட்டாரங்களில் மழைநீா் வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகா் பகுதிக்குள் மழைநீா் வராதவாறு 60 வாா்டுகளிலும் தேவையான கட்டமைப்புகள், சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலி மனைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெறுகிறது. காலி மனைகள் கணக்கெடுக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு குறைந்த விலையில் மண் வழங்கி, மனையை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரில் விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் நாள்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதைசாக்கடை திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

புதிய குடியிருப்புகள் உருவாவதற்கேற்ப மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1,200 மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையான கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

இதில், இணை ஆணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், நகர அமைப்புத் திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா் காந்திமதி, கண்காணிப்பாளா் குருவையா, நகா்நல அலுவலா்கள் வினோத்ராஜா, சூா்யபிரகாஷ், இளநிலைப் பொறியாளா் செல்வம், சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன், ராஜபாண்டி, குழாய் ஆய்வாளா் நிக்சன், மாமன்ற உறுப்பினா்கள் சரவணக்குமாா், பட்சிராஜ், ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, வெற்றிச்செல்வன், முத்துமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.