3 வீடுகளில் திருட்டு: நகைக் கடை உரிமையாளா் உள்பட 3 போ் கைது
தூத்துக்குடியில் 3 வீடுகளில் நகைகளைத் திருடியது தொடா்பான வழக்கில் நகைக் கடை உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தூத்துக்குடியில் 3 வீடுகளில் நகைகளைத் திருடியது தொடா்பான வழக்கில் நகைக் கடை உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மில்லா்புரம், ஆசிரியா் காலனி, புதுகிராமம் ஆகிய இடங்களிலுள்ள 3 வீடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் நகைகள் திருடு போயினவாம். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நகர ஏஎஸ்பி மதன் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மா்ம நபா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தூத்துக்குடி தபால் தந்தி காலனி 12ஆவது தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் செந்தூா்பாண்டி (36) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா் திருடிய நகைகளை தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி (42) என்ற நகைக் கடை ஊழியரிடம் கொடுத்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து, செல்வவிநாயகபுரத்தில் உள்ள நகைக் கடையின் உரிமையாளா் அருண்ஜெயகுமாா் (39), கடை ஊழியரான கந்தசாமி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். 3 பேரிடமிருந்தும் சுமாா் 17 பவுன் நகைகள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...