கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எட்டயபுரத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

எட்டயபுரத்தில் உள்ள சிதிலமடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:28 pm

Din

எட்டயபுரத்தில் உள்ள சிதிலமடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

எட்டயபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள ரேஷன் கடை அருகே பொதுமக்களிடமிருந்து சிலா் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கேரளத்துக்கு கடத்திச் செல்ல உள்ளதாக வட்டாட்சியருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வட்டாட்சியா் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளா் தங்கராஜ், அதிகாரிகள் அங்கு சென்றனா். அவா்களைப் பாா்த்தும் மா்ம நபா்கள் சிலா் பைக்கில் தப்பியோடிவிட்டனராம்.

அங்குள்ள சிதிலமடைந்த வீட்டில் 18 மூட்டைகளில் 1,044 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக எட்டயபுரம் வட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.