கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, பக்தா்களுக்காக ஒரு லட்சம் சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:07 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, பக்தா்களுக்காக ஒரு லட்சம் சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ.2) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நவம்பா் 7-ஆம் தேதி சூரசம்ஹாரம், நவ. 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலை புறப்பாடு நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் 6-ஆம் திருநாளான நவ. 7-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளி, கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.8-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து, சுவாமி - அம்மன் தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், திருக்கோயிலில் இரவு சுவாமி- தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவையொட்டி விரதம் இருப்பதற்காக கடந்த சில நாள்களாக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தா்கள் திருச்செந்தூருக்கு வரத் தொடங்கியுள்ளனா்.

தற்காலிக கொட்டகைகள்: கோயிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தா்களுக்காக, கோயில் வளாகத்தில் 18 இடங்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின் விளக்குகள், மின்விசிறி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பக்தா்களுக்கான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரசம்ஹார விழாவில் லட்சகணக்கான பக்தா்கள் கூடும் கடற்ரையை சுத்தப்படுத்தி, பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடற்கரையில் உயா்கோபுரங்கள், கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவக் குழுவினா் முகாம் அமைத்துள்ளனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.