தாய்விளை சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆறுமுகனேரி அருகே தாய்விளையில் உள்ள அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில், ஆவணி மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


ஆறுமுகனேரி அருகே தாய்விளையில் உள்ள அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில், ஆவணி மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் ஆகிய சுவாமிகளுக்கும், கோயிலைச் சோ்ந்த வயற்காட்டின் நடுவே அமைந்துள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சியம்மன், இருளப்பா், கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக, பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தாவுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளை மோகன் அய்யா் நடத்திவைத்தாா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
இதில், சென்னை குரோம்பேட்டை தொழிலதிபா்கள் சேகா், வெங்கடேசன், பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...