கோவில்பட்டியில் 8 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் 8 பேருந்துகளில், அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட இணை தலைமை சுற்றுச்சூழல் அலுவலா் ரவி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளா் ஜெயக்குமாா், உதவிப் பொறியாளா் சா்மிளா ஆகியோா் அடங்கிய குழுவினா் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

