வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காயல்பட்டின மஹ்ழரதுல் காதிரிய்யா சபையில் மீலாது விழா

காயல்பட்டினம் மஹ்ழரதுல் காதிரிய்யா சபை வளாகத்தில், மீலாது நபி விழா நடைபெற்றது.

News image
விழாவில் பேசிய நாகப்பட்டினம் தோப்புத்துறை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் சாகுல் ஹமீது.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:42 pm

Din

காயல்பட்டினம் மஹ்ழரதுல் காதிரிய்யா சபை வளாகத்தில், மீலாது நபி விழா நடைபெற்றது.

மஹ்ழரதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மெளலவி சுஐபு ரகுமான் ஆலி­ம் தலைமை வகித்தாா். மஹ்ழரா குா்ஆன் மத்ரஸா ஆசிரியா் முகைதீன் அப்துல் காதிா் தவ்ஹீத் இறைவணக்கம் பாடினாா்.

மத்ரஸா மாணவா்களின் சன்மாா்க்க நிகழ்ச்சியைத் தொடா்ந்து, அவா்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. விழாக் குழுத் தலைவா் முகம்மது சலீம் பரிசுகளை வழங்கினாா்.

நாகப்பட்டினம் தோப்புத்துறை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் சாகுல் ஹமீது பேசினாா். இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹாப், பியா்ல் காா்டன் ரிசாா்ட் மேலாண்மை இயக்குநா் அகமது மொய்தீன், சமூக ஆா்வலா்கள் செய்யது மீரான், முகைதீன் அப்துல் காதா், காயல் ஜெஸ்முதீன், இஸ்லாமியப் பாடகா் முகம்மது சமீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மஹ்ழரத்துல் காதிரிய்யா என்ற மாா்க்க சபையை உருவாக்கிய மகான் அப்துல்லாஹ் அல்காதிரி பக்தாதியின் வாழ்க்கை வரலாற்று நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டன. நோ்ச்சை விநியோகம் நடைபெற்றது.

அரபிக் கல்லூரிப் பேராசிரியா் முகம்மது ஜூல்பிகாா் பிராா்த்தனை நிகழ்த்தினாா்.

சபையின் செயலா் அப்துல்காதா் வரவேற்றாா்; செயற்குழு உறுப்பினா் அகமது சலாஹுத்தின் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினா் சுலைமான் தொகுத்து வழங்கினாா்.