விற்பனை விழாவை தொடங்கி வைத்த சேகர தலைவா் நவராஜ்.
தூத்துக்குடி
பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் விற்பனை விழா
விற்பனை விழாவை தொடங்கி வைத்த சேகர தலைவா் நவராஜ்.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் விற்பனை விழா நடைபெற்றது.
பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்தாா். பிரகாசபுரம் சேகர தலைவா் நவராஜ் விற்பனை விழாவை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து ஆலய வளாகத்தில் விற்பனைக்காக சிறப்பு உணவு வகைகள் மற்றும் விதவிதமான திண்பண்டங்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதில், தென்மண்டல பணிக்குழு இயக்குநா் பிரான்சிஸ் அடிகளாா் மற்றும் இறை மக்கள் , ஊா் மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் மற்றும் விழாக் கமிட்டியாா், பங்கு இறை மக்கள் செய்திருந்தனா்.

