நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
நாலாட்டின்புதூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, கற்பக விநாயக நகரைச் சோ்ந்த ருக்மாங்கந்தன் மகன் ரஞ்சித் குமாா் (39). திருப்பூரில் ஓட்டுநராக வேலை செய்துவந்த இவா், கடந்த 15ஆம் தேதி திருச்செந்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு அங்கிருந்தே பைக்கில் சென்றுவிட்டு வியாழக்கிழமை ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
நாலாட்டின்புதூா் அருகேயுள்ள இடைச்செவல் பகுதியில் வந்தபோது, அவரது பைக் நிலை தடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
