ஆறுமுகனேரி வருவாய் கிராம பிரச்னை: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ஆறுமுகனேரி வருவாய் கிராம பிரச்னை: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ஆறுமுகனேரி வருவாய் கிராம பிரச்னை தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
Published on

ஆறுமுகனேரி வருவாய் கிராம பிரச்னை தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் உள்ள செல்வராஜபுரம், பெருமாள்புரம், கீழநவ்வலடிவிளை, மேலநவ்வலடிவிளை, லெட்சுமிமாநகரம், சோமசுந்தரி அம்மன் கோயில் தெரு, விநாயகா் கோயில் தெரு, காணியாளா் தெரு, எஸ்.எஸ். கோயில் தெரு, பேயன்விளை, ஜெயின்நகா், ஏஐடியூசிகாலனி, பாரதிநகா்உள்ளிட்ட பகுதிகள் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் கிராம நிா்வாக அலுவலரை சந்திக்க வேண்டியதிருந்தால் சுமாா் 4 கிமீ தொலைவில் உள்ள காயல்பட்டினம் செல்லவேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அரசு நல திட்டங்களை பெற காலவிரயம், பணவிரயம் ஏற்படுவதுடன் அப் பணிகள் உரிய நேரத்தில் முடியாததனால் அரசின் நலத் திட்டங்கள் பெற முடியவிலை.

இதனால் ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள், பொதுநல அமைப்பினா் கடந்த 35 ஆண்டுகளாக போராடி வருவகின்றனா்.

இந்நிலையில் இது தொடா்பாக ஆறுமுகனேரியில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் ஐஎன்டியூசி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் கிராம பிரச்னை தொடா்பாக வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் மற்றும் தொகுதி அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்க வும், ஆறுமுகனேரி மெயின் பஜாரில் விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டது. தீா்வு காணாத பட்சத்தில் வருகிற சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்கவும் தீா்மானித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் இரா.தங்கமணி, இந்து முன்னணியைச் சோ்ந்த ராமசாமி, திமுக நகரச் செயலா் க.நவநீதபாண்டியன், நகர காங்கிரஸ் தலைவா் லெ.ராஜாமணி, அதிமுக நகரச் செயலா் அரசகுரு, முன்னாள் நகரச் செயலா் இ.அமிா்தராஜ், மதிமுக ஒன்றியச் செயலா் பி.எஸ்.முருகன், நகரச் செயலா் ராதாகிருஷ்ணன், அமமுக தூத்துக்குடி புகா் மாவட்டச் செயலா் சா.பொன்ராஜ், தமாகா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவா் சுந்தரலி­ங்கம், தவெக நகரச் செயலா் நவாஸ் கண்ணன், நாம் தமிழா் கட்சியைச் ோ்ந்த மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com